Pages

April 29, 2008

நிராகரிப்பவர்களே! இந்த இறைத்தன்மைகள் நீங்கள் வணங்கும் கடவுளர்களுக்கு உண்டா? என்றேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?

அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 59:22,23,24)

No comments: