Pages

September 17, 2008

அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதைக் குறைவாக காண்பவர் வேதனையையே வேண்டுகிறார்!

"மஸீஹும், அல்லாஹ்வோடு நெருங்கிய மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைப் பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வத்தால் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை குறைவாகக் காணுகின்றனரோ அவர்கள் யாவரையும் மறுமையில் அவன் தன்னிடம் கொண்டுவரச் செய்வான். ஆகவே எவர் உண்மையாகவே விசுவாசம் கொண்டு நர்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலியைப் பூரணமாக வழங்கி தன் அருளால் பின்னும் அதிகப்படுத்துவான். எவர் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாக காணுகின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனைப் படுத்துவான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு தோழரையும், உதவிப் புரிவோரையும் (அங்கு) அவர்கள் காண மாட்டார்கள்". (அல்குர்ஆன்: 4:172-173)

No comments: