August 27, 2006
நிச்சயமாக வியாபாரம் வட்டியை போன்றதா?
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில் - நியாயத் தீர்ப்பு நாளில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய் எழ மாட்டார்கள்) இதற்குக் காரணம் "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, (ஆகுமாக்கி) வட்டியை ஹராமாக்கி (ஆகுமானதல்ல) இருக்கின்றான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகி விடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கின்றது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன்: 2:275)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment