February 22, 2011
அல்லாஹ்வுடன் வேறு கடவுளர்கள் இருக்கின்றனரா? இல்லவே இல்லை!
முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்." (அல்குர்ஆன்: 27:64)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
mathaveriku allave illaya
மற்றவருக்கு அல்லாஹ்வே இல்லையா? (ராஜு செல்வராஜ்)
அன்பின் சகோதரர் ராஜூ அவர்களே! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
நாம் நம்மை சுற்றியிருக்கின்றவைகளை பார்க்கும்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்பத்தலைவர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநகருக்கும் ஒரு மேயர் இருக்கின்றார்; ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் ஒரு முதல்வர் இருக்கின்றார்; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்கின்றார்; ஓவ்வொரு நாட்டிற்கும் ஒரு பிரதமர்-தலைவர் இருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். நாம் காணும் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தியாளரின் தயாரிப்பு, ஒவ்வொரு அழகிய கலையும் ஒரு கலைஞரின் படைப்பு என்பதை நாம் ஐயமற அறிவோம். அதுபோலவே இந்த முழு உலகத்திற்கும், முழு மானிட சமுதாயத்திற்கும் ஒரே இறைவன் தான் இருக்க முடியும். நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளும் இதைத்தான் நமக்கு ஐயமற உணர்த்துகின்றன. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் அல்லாஹ் ஒருவனே. இதை நீங்கள் அறிகின்ற நாளில் கைசேதப்படாமல் இருக்கவே இறைவனின் எச்சரிக்கைகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!
Post a Comment