Pages

July 11, 2011

இறைநம்பிக்கை பெற்றுத்தரும் உயர்ந்த தங்குமிடம்!

இறைநம்பிக்கைக் கொண்டு நற்செயகள் புரிகின்றவர்களோ -- திண்ணமாக, நாம் நற்செயல் புரிவோரின் கூலியை வீணாக்குவதில்லை! அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்க காப்புகள் அணிவிக்கப்படும்.* மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சைநிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்து இருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும். (அல்குர்ஆன்:18:30-31)


*பண்டைக்காலங்களில் அரசர்கள் தங்கக்காப்புகள் அணிவார்கள். சுவன வாசிகள் அணியும் பொருள்களில், இதனையும் ஒன்றாக கூறுவதன் நோக்கம் இவ்வாறு விளக்கிக் காண்பிப்பதாகும். அதாவது, அங்கு அவர்களுக்கு அரச ஆடைகள் அணிவிக்கப்படும். இறை நிராகரிப்பாளனும் தீயவனுமான ஓர் அரசன் அங்கு இழிந்தவனாகி விடுவான். ஆனால், நம்பிக்கையாளரும் ஒழுக்கசீலருமான ஒரு கூலியாளி அங்கு அரசர்களின் பெருமையோடும் கண்ணியத்தோடும் விளங்குவார்.

No comments: