Pages

January 15, 2012

பலதெய்வ வணக்கத்தை எதிர்த்து போராட குர்ஆன் கூறும் அழகிய முன்மாதிரி!

'இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது। அவர்கள் தம் ஜனங்களை நோக்கி, 'நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றிலிருந்தும் விலகி விட்டோம்। நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும், உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது' என்று கூறினார்கள். அன்றி இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி 'அல்லாஹ்விடத்தில் உமக்காக யாதொன்றையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும் உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்புக் கேட்பேன்' என்று கூறி 'எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்மீதே நாங்கள் பாரம் சாட்டினோம். உன்னிடமே (நாங்கள் யாவரும்) வரவேண்டியதிருக்கிறது. எங்கள் இறைவனே! நீ எங்களை நிராகரிப்போரின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானமுடையவன்' என்று பிரார்த்தித்தார்' (அல்குர்ஆன்:60:4-5)

No comments: