Pages

February 16, 2012

(இறைவனுக்கு) இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?) (56:41)

(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் - அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள். (அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை. நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர். ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர். மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். "அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.) (நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். "குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள். அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள், ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள். ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள். அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள். "பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்." இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும். நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (அல்குர்ஆன்: 56:42-57)

No comments: