Pages

February 26, 2012

படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்!

‘இணை வைத்துக்கொண்டிருப்போருக்கு இவர்கள் தங்களுக்குத் தாங்களே நிராகரிப்பைக் கொண்டு சாட்சி கூறிக் கொள்பவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய பள்ளிகளை இவர்கள் நிர்வாகம் செய்ய எவ்வித உரிமையும் இல்லை. அத்தகையோர் அவர்களுடைய செயல்கள் அழிந்து விட்டன. இன்னும் அவர்கள் (நரக) நெருப்பில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.’ (அல்குர்ஆன்:17:9)

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான். மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ அவர் திட்டமாக வெகுதூரமான வழிகேடாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன்:4:116)

‘நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியை தடுத்து விடுகிறான். மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான். இன்னும் (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் இல்லை.’ (அல்குர்ஆன்:5:72)

No comments: