சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது- நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- மலைகள் பெயர்க்கப்படும் போது- சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது- கடல்கள் தீ மூட்டப்படும்போது- உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- பட்டோலைகள் விரிக்கப்படும் போது- வானம் அகற்றப்படும் போது- நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். (அல்குர்ஆன்: 81:1லிருந்து 14வரை)
May 09, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment