Pages

June 14, 2012

இறந்தவர்களை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான்?

அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். (அல்குர்ஆன்: 36:33)


அபூரஸீன் அல்உகைலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இறந்தவர்களை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான்?" என்று கேட்டேன். அதற்கு, "நீங்கள் வறண்டுபோன ஒரு நிலத்தில் நடந்துவிட்டுப் பின்னர் அதே நிலம் செழித்திருக்கும் போது நடந்திருக்கிறீரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள் "அவ்வாறுதான் திரும்ப உயிர் கொடுத்து எழுப்புதலும்" என்றார்கள். அல்லது "அவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்" என்றார்கள். (நூல்: அபூதாவூத் அத்தயாலிசீ.)

No comments: