Pages

July 09, 2012

இறைவன் பேச விரும்பாத துர்பாக்கிய கூட்டத்தினர்!

ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள். (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும். இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். "என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்" (என்று கூறப்படும்) "எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது. நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்" என்று அவர்கள் கூறுவார்கள். "எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக. திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!" (என்றும் கூறுவர்.) (அதற்கவன்) "அதிலேயே இழிந்து கிடங்கள். என்னுடன் பேசாதீர்கள்!" என்று கூறுவான். (அல்குர்ஆன்:23:103-108)

No comments: