Pages

December 17, 2012

இறை உபதேசமான குர்ஆனை புறக்கணித்து கர்வம் கொண்டவனின் இறுதி இழிநிலை!

"எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று கூறினான். (அப்போது அவன்) "என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?" என்று கூறுவான். (அதற்கு இறைவன்,) "இவ்விதம்தான் இருக்கும். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அவற்றை நீ மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்" என்று கூறுவான். ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம். மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன்: 20:124-127)

No comments: