Pages

March 18, 2013

நல்லோர், தீயோரின் முக அடையாளம்!

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும். கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள். அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள். (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம். மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான். (அல்குர்ஆன்:3:106-108)

No comments: