Pages

August 20, 2013

உறவுகளில் மணம் புரிவதிலிருந்து விலக்கப்பட்ட இறை வரம்புகள்!

“(பின் வரும் பெண்களை மணம்புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது): உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள், மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னால் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடியில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணமாகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து அவர்களின் புதல்வியரை மணந்து கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை.

மேலும் உங்கள் முதுகந்தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன). ஆனால் இதற்கு முன் நடந்து விட்டதைத் தவிர. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:23)

No comments: