(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில்
அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை.
மறைவானவற்றை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்
என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை. எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத்
தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்:
‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
(அல்-குர்ஆன் 6:50)
(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ்
நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள
சக்தியில்லாதவன். மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை
அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும்
என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’
(அல்-குர்ஆன் 7:188)
வானங்களிலும், பூமியிலும் உள்ள
மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே
எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள். அவன்
மீதே (பாரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் – நீங்கள் செய்பவை
குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்-குர்ஆன் 11:123)
(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத்
தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய
மாட்டார். இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள்
என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65)
No comments:
Post a Comment