மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா? ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம். பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு (அருளாளனுக்கு) மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்களுடைய பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது. இது உம் இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம். ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (அல்குர்ஆன்: 19:66-72)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment