(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை
(அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம். அப்போது, பூமியை நீர்
வெட்டவெளியாக காண்பீர். அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம்
ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள். "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள். ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்)
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும். அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர். மேலும் அவர்கள், "எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டு வைக்கவில்லையே!" என்று கூறுவார்கள். இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். (அல்குர்ஆன்: 18:47,48,49)

No comments:
Post a Comment