இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் "எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (அந்தத் தெய்வங்கள், "நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே" என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும். இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்கள். பின்னர் இவர்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்தவையெல்லாம் இவர்களை(க் கை) விட்டும் மறைந்து விடும். (அல்குர்ஆன்: 16:86-87)
July 05, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment