August 31, 2010

புண்ணியம் என்பது எது?

'புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்குப் பக்கமோ, மேற்குப் பக்கமோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது, அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு)நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதலில்தான் இருக்கிறது' (அல்பகரா:177).

August 30, 2010

அல்லாஹ் தனது தூதருக்கு அளித்த சில உரிமைகள், விதி விலக்குகள்.

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன்மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன். மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன்: 33:50)

August 29, 2010

பிரகாசமான அல்லாஹ்வின் வேத வசனங்கள்.

(அல்லாஹ்வாகிய) அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளிக்கொண்டு வருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன்: 57:9)

August 28, 2010

நன்மை - நன்மையின் மேல் நன்மை.

ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 42:23)

August 27, 2010

நயவஞ்சக அமல்கள்.

நயவஞ்சகர்களான ஆடவரும் நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவங்களைத் தூண்டி நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள், அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள், ஆகவே அவன் அவர்களை மறந்துவிட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள். (அத்தவ்பா 67)

August 26, 2010

உடலும். பேச்சும் அழகு - உள்ளமோ மிக மோசமான நயவஞ்சகம்

இவர்களை நீர் பார்த்தால் இவர்களுடைய உடல்( அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும், அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர், எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்: சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள், இவர்கள் தான் (உம்) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? (அல்முனாபிக்கூன் 04)

August 25, 2010

நயவஞ்சகம் எவ்வாறு உதயமாகிறது.

அவர்களில் சிலர் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான) தர்மங்கள் செய்து நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கி விட்டனர்.

எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததனாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அத்தவ்பா 75,76,77)

August 24, 2010

நிச்சயமாக கண்ணியம் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.

(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு 'நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு' என்று நன்மாரயங் கூறுவீராக! இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. (அன்னிஸா 138,139)

August 23, 2010

நயவஞ்சகத்துக்கும், நிராகரிப்புக்கும் அல்லாஹ் வாக்களிக்கும் நரக நெருப்பு.

நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு. (அத்தவ்பா-68)

August 22, 2010

அல்லாஹ்வின் வேத வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் கண்டால்....

(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும் பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால் அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே, நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்து விடுவான். (அன்னிஸா-140)

August 21, 2010

மனிதனை ஆச்சரியப்படுத்தும் இந்த விஷயங்களில் அல்லாஹ்வின் நாட்டம்

அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம், அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (அத்தவ்பா-55)

August 20, 2010

நாங்களும் முஸ்லிம்கள் தான் எனக் கூறிக் கொண்டு நயவஞ்சகத்தில் இருந்தோரின் நரக கூப்பாடு.

முனாஃபிக்கான ஆண்களும் முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: 'எங்களை கவனியுங்கள். உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்' என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக), அவர்களுக்குக் கூறப்படும்: 'உங்களுக்குப் பின்னால் திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்'. பிறகு அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒருவாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.

இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) 'நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?' என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள். 'மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள், (இந் நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள், அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய) வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்' என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள். (அல்ஹதீத் 57:13,14)

August 19, 2010

அனைத்து நபிமார்களுக்கும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்ட முக்கிய செய்தி!

'(நம் தூதராகிய) உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், 'நீர் (இறைவனுக்கு) இணைவைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள். (என்பதுவேயாகும்)'. (அஸ்ஸுமர்:65).

August 18, 2010

அல்லாஹ்வின் அழகிய வாக்குறுதி!

'ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (மார்க்கத்துக்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க, தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்'. (அந்நஹ்ல்:97).

August 17, 2010

பரிசுத்த உள்ளமே அல்லாஹ்விடம் கண்ணியம் மிக்கது!

'(தீர்ப்பு நாளாகிய) அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டாது, எவரொருவர் பரிசுத்த உள்ளத்துடன் அல்லாஹ்விடம் வருகிறாரோ அவரைத் தவிர (அவர் கண்ணியம் அடைவார்)'. (அஷ்ஷுஃறா:88-89).

August 16, 2010

அல்லாஹ்வையன்றி உலகில் வணங்கப்படும் அனைத்தும் ஷைத்தானிய பிம்பங்களே!!

'ஒவ்வொரு சமூகத்துக்கும், நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர்கள் அச் சமூகத்திடம்), அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், (அவனல்லாது வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்துகளிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'. (அந்நஹ்ல்:36).

August 15, 2010

உலகையும், உயிர்களையும் படைத்தவனின் உயரிய நோக்கம்!

'மேலும்; ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் (என் படைப்புகளுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை, அன்றியும் எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை'. (அத்தாரியாத்: 56).

August 14, 2010

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதலுக்கான உவமையும், அல்லாஹ்வின் அறிவுரையும்.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:261,262)

August 13, 2010

அல்லாஹ்வே நம்பிக்கைக் கொண்டவர்களின் பாதுகாவலன்.

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன்: 2:257)

August 12, 2010

காஃபிர்கள் வெறுத்த போதிலும் உண்மையின் பக்கம் செல்ல முஃமினுக்கு நேர்வழி காட்டும் அல்லாஹ்.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான். எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன்: 2:213)

August 11, 2010

அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே பிரார்த்தித்தால்...

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 2:186)

August 10, 2010

நோன்பு கால இரவில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டதா?

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன்: 2:187)

August 09, 2010

நோன்பின் பலனை அறீவீர்களானால்...

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (அல்குர்ஆன்: 2:184)

August 08, 2010

குர்ஆனிய மாதம்!

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (அல்குர்ஆன்: 2:185)

August 07, 2010

நோன்பின் மூலம் மனிதன் பெறுவது என்ன?

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” (அல்குர்ஆன் 2:183)

August 06, 2010

மனிதர்கள் மீது இரக்கமும், அன்பும் உள்ள அல்லாஹ்

(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)

August 05, 2010

முஸ்லிமிடம் இருக்க வேண்டிய உபகாரப் பண்புகள்

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 46:36)

August 04, 2010

முந்தைய வேதங்களை மெய்யாக்கும் அரபி மொழியிலான குர்ஆன்

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது. (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: 46:12)

August 03, 2010

வாழ்வின் சுகப் பொருட்கள் அல்லாஹ்வின் சோதனையே!

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன்: 64:15)

August 02, 2010

கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றிப் பெற்றவர்கள்!

ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன்: 64:16)

August 01, 2010

அல்லாஹ்வின் எச்சரிக்கை!

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன்: 64:14)