Pages

March 13, 2014

இவ்வுலக பயணத்தில் இறை அவகாசத்தைத் தீர்ப்பாக எண்ணாதீர்!

இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில் (நம்பிக்கை கொண்டவர்களிடத்தில்) (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை மிக அழகாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர். இன்னும், இவர்களை விட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம். “யார் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை (தீர்ப்பு நாளை) காணும் வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான். (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலகீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்துக் கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 19:73,74,75)

No comments: