January 10, 2012
ஈமானில் உறுதியற்ற, தொழாதவனுக்கான அல்லாஹ்வின் மிகப்பெரிய சாபம்!
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதி கொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். (அல்குர்ஆன்:75:26லிருந்து 35வரை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment