Pages

January 13, 2012

அல்லாஹ்வுடைய விரோதிகளுக்கு இறைஞ்சுதல் ஒரு முஸ்லிமுக்கு ஆகுமானதல்ல!

"இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம் அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே அல்லாது வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்று தெளிவாகத் தெரிந்ததும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் மிக்க இரக்கமும், அடக்கமும் உடையோராக இருந்தார்". (அல்குர்ஆன்: 9:114)


அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸில் நபிகள் (ஸல்) கூறுகிறார்கள்: இப்ராஹீம் நபியவர்கள் தம் தகப்பனார் 'ஆஸரை' மறுமை நாளில் சந்திக்கும் போது அவர் வாடிய முகத்துடன் காணப்படுவார். இந்நிலையைக் காணும் நபி இப்ராஹீம் தம் தகப்பனாரைப் பார்த்து 'எனக்கு பாவம் செய்யாதீர் என நான் அன்று உலகில் வைத்து உம்மைத் தடுக்கவில்லையா?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்களின் தந்தை ஆஸர் இப்ராஹீமை நோக்கி: இன்று நான் உமக்குப் பாவம் ஏதும் செய்ய மாட்டேன்!' என பதிலுரைப்பார். இதைக்கேட்ட இப்ராஹீம் நபியவர்கள் "இறைவா! நீ மறுமையில் என்னைக் கேவலப்படுத்துவதில்லை என வாக்களித்தாயே. இதோ என் தந்தை படும்பாட்டை விட எனக்குக் கேவலமான ஒரு காட்சி இனியும் உண்டோ? எனக்கூறி அல்லாஹ்விடம் முறையிட 'இந்நேரம் காஃபிர்களுக்கு சுவனத்தை ஹராமாக்கி-விலக்கி விட்டேன்' என்று அல்லாஹ் கூறுவான். பிறகு: 'இப்ராஹீமே! கீழே நோட்டமிடுவீராக!' என சொல்லப்படும். அவர்கள் கீழே பார்க்கும்பொழுது தம் தந்தை ஆஸர் இரத்த நிறமுள்ள ஒரு கழுதைப் புலியின் வாய்க்குள் இருப்பதைப் பார்ப்பார்கள். பின்னர் அதன் கால்களைப் பிடித்து நரகில் தூக்கி எறியப்படும். (ஸஹீஹ் புகாரி)

No comments: