இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான். உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும். பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான். அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்தி பெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன். ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 16:72-74)
February 16, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment