Pages

November 27, 2013

தமது குற்றங்களுக்கு, கடவுள்தான் காரணம் என குறை சொல்பவர்களே! கவனியுங்கள்!

அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம. இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்' என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள். எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை). மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும்,    'அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். சைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அல்குர்ஆன்: 16:36)

No comments: