Pages

May 27, 2007

இன்றும் உயிருடனிருக்கும் ஈஸா (அலை)

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை (உம்முடைய ஆயுளைப்) பூர்த்தி செய்வேன். உம்மை என் பக்கம் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்போரின் அவதூறுகளிலிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துவேன். உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களை விட மறுமைநாள் வரை மேலாக்கியும் வைப்பேன்" (அல்குர்ஆன்: 3:55)

1 comment:

jafarla said...

//"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மை (உம்முடைய ஆயுளைப்) பூர்த்தி செய்வேன். உம்மை என் பக்கம் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்போரின் அவதூறுகளிலிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துவேன். உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களை விட மறுமைநாள் வரை மேலாக்கியும் வைப்பேன்"//"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது.
இந்த திருவசனத்தில் இடம் பெற்றுள்ள 'முதவபீக' என்ற சொல்லுக்கு 'நான் உம்மை மரணிக்க செய்வேன்' என்பதே சரியான பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லுக்கு 'முமீதுக' அதாவது, நான் உம்மை மரணிக்க செய்வேன் என்ற பொருள் தந்துள்ளதாக ஸஹீஹுல் புகாரியில் காணப்படுகிறது. எல்லா அறபி மொழி வல்லுனர்களும் இந்தச் சொல் மேற்கண்ட வசனத்தில் கையாளப்பட்டிருப்பது போல் கையாளப்பட்டிருந்தால் அதன் பொருள் 'மரணிக்கச் செய்தல்' என்பதல்லாமல் அதற்க்கு வேறு எந்த அர்த்தமும்கொள்ளயியலாது என தெளிவு படுத்துயுள்ளனர். எடுத்துக்காட்டாக அல்லாமா அபுல் பகா அவர்கள் தமது 'குல்லிய்யாத்' எனும் அகராதியில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளதை கூறலாம்.

"தவப்பீ' யின் பொருள் மரணிக்கச் செய்வதும் உயிரை வாங்குவதுமாகும். இவ்வினைப் பெயர் 'வபாத்' எனும் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்"

மேலும் 'தவப்பீ' என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருளில்லை என்பதை இமாம் மாலிக் (ரஹ்) , இமாம் புகாரி (ரஹ்) போன்றோர் உறுதி செய்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி - அத்தியாயங்கள் 'தப்ஸீர்' மற்றும் 'பதல் கல்க்' )

திருக்குரானில் இந்த தவப்பா என்ற சொல் இருபத்தைந்து இடங்களில் காணப்படுகிறது. (3"194. 4:16, 7:127, 8:51, 10:47, ஆகியன காண்க) இதில் இருபத்து மூன்று இடங்களில் இச் சொல் மரணத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது.