Pages

September 03, 2008

சூனியத்தை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை

"மேலும் அவர்கள் ஸுலைமானுடைய ஆட்சியைப்பற்றி ஷைத்தான்கள் ஓதிக்காட்டிக் கொடுத்தவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் காஃபிராக இருக்கவில்லை. அந்த ஷைத்தான்கள் தான் காஃபிர்களாக இருந்தார்கள். அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவ்விருவரும் 'நாங்கள் சோதனையாக இருக்கிறோம். நீங்கள் காஃபிர்களாக ஆகிவிட வேண்டாம்.' என்று கூறும்வரையில் அவர்கள் யாருக்கும் அதனைக் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை உண்டு பண்ணக் கூடிய உபாயத்தை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதைக் கொண்டு அவர்கள் ஒருவருக்கும் தீங்கிழைத்து விட முடியாது. அன்றி அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர அவன் எதை விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை என்பதைத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். அன்றி தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது கெட்டதாகும். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?. (அல்குர்ஆன்: 2:102)

No comments: