Pages

July 22, 2011

அல்லாஹ்வை அவனுடைய வல்லமையைக் கொண்டு பெருமைப் படுத்துதல்!

"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்। அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறிவீராக. இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர். மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக. "அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும்,எந்தவித பலகீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:110)

No comments: