Pages

March 28, 2013

இறைவனை துதிப்பதின் மகத்துவம்!

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.

காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.

அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டு வந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய மலக்குகளும் உங்களுக் காகப் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)களின் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.

(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) "ஈடேற்றம் உண்டாவதாக" என்று ஆசீர்வதிப்பான். அன்றி, அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன்:33:41-44)

No comments: