அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறெவருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதராவார்கள் என மொழிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுக்கும் வரையில் நான் (இறைமறுப்பாளர்களை) எதிர்த்துப் போராடும்படி கட்டளை இடப்பட்டுள்ளேன். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (வரம்பு மீறாமல்) இவற்றை அவர்கள் நிறைவேற்றி விடுவார்களானால், தமது உயிர், உடைமைகளுக்கு என்னிடம் பாதுகாப்புப் பெறுவார்கள். மேலும் அவர்களுக்குரிய விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.’ (ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம்)
January 07, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment