February 28, 2009

அல்லாஹ்வால் மட்டுமே முடியும் மகத்தான பணிகள்!

“துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (அல்குர்ஆன்: 27:62).

February 27, 2009

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

”விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.” (அல்குர்ஆன்: 53:1-4)

February 26, 2009

அல்லாஹ்வின் மகத்தான ஞானம்!

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (திருக்குர்ஆன்: 6:59)

February 25, 2009

அல்லாஹ்வை எப்படி மறுக்க முடியும்?

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:28)

February 24, 2009

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனை அறிந்து கொள்ளுதல்!

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள்ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன்: 88:17-20)

February 23, 2009

இறைத்தூதர்களுக்கும் இணைவைப்பு பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 39:65,66)

February 22, 2009

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு ஹராமாகிய சொர்க்கம்!

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.” (திருக்குர்ஆன்: 5:72)

February 21, 2009

அநீதி என்பது யாது?

”என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன்: 31:13)

February 20, 2009

கீர்த்தியளிக்கும் இந்த வேதத்தை பின்பற்றியது பற்றி மனிதன் விசாரிக்கப்படுவான்!

“(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” (அல்குர்ஆன்: 18:1-3)

February 19, 2009

சுவனபதியின் தன்மை!

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும். அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை. இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும். காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும். (அல்குர்ஆன்: 13:35)

February 18, 2009

(நபியாகிய) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நன்மையாகும்!

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன்: 4:170)

February 17, 2009

ஷைத்தான் மயக்கிய வழிகெட்ட மனிதர்கள்.

''நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (நேர்வழி செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்று விட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கி விட்டான், அன்றி அவர்களுடைய தப்பெண்ணங்களையும் அதிகப்படுத்தி அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்'' (அல்குர்ஆன்: 47:25)

February 16, 2009

முழு முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து பற்றிப் பிடித்து கொள்ள வேண்டிய வேதநூல்!

''இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை (அல்குர்ஆனை) ஒன்றிணைந்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள், அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளை (நிஃமத்) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள், உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்து அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்'' (அல்குர்ஆன்: 3:103)

February 15, 2009

அல்லாஹ்வின் கடுமையான வேதனையைப் பெறப்போகும் கூட்டத்தார்!

''(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு வேறுபட்டு விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகி விடாதீர்கள், அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு'' (அல்குர்ஆன்: 3:105)

February 14, 2009

முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்க வேண்டாம்!

''நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்குரிய விதத்தில் அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சியும், ஆதரவு வைக்க வேண்டிய முறைப்படி ஆதரவும் (தக்வா), வையுங்கள். முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்க வேண்டாம்'' (அல்குர்ஆன்: 3:102)

February 13, 2009

மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைக்கும் வேதநூல்!

''(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே சமுதாயத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையே நிறைந்த (நெறி காட்டும்) நூல்களையும் இறக்கி வைத்தான். எனினும் (நெறி காட்டும்) நூல்கள் கொடுக்கப்பட்டவர்கள். தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே எழுந்த பொறாமையின் காரணமாக மாறுபட்டார்கள், ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு நம்பிக்கைக் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான், இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்''. (அல்குர்ஆன்: 2:213)

February 12, 2009

தான் மொழியக்கூடிய சொல்லால் அழகியவர்!

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, ''நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?'' (அல்குர்ஆன்: 41:33)

February 11, 2009

இறைநம்பிக்கை கொண்டு வெற்றி பெறுவதாக இருந்தால் அவரிடம் கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமான நம்பிக்கைகள், செயல்பாடுகள்!

அலிஃப், லாம், மீம். இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன்:1-5)

February 10, 2009

அல்குர்ஆன் எனும் வேதத்தின் பாதுகாவலன்!

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(அல்குர்ஆன்: 15:9)

February 09, 2009

அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றல்!

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:101-103)

February 08, 2009

துறவறம் அல்லாஹ் கொடுத்ததா?

ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக் கொண்டார்கள்), ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை (அல்குர்ஆன் 57:27)

February 07, 2009

அல்லாஹ்வின் எச்சரிக்கை!

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 47:38)

February 06, 2009

இவை அனைத்தும் என் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தம்!

நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன்: 6:162)

February 05, 2009

இந்த உலகம் வீணென்பது நிராகரிப்போரின் கூற்று.

வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும். (அல்குர்ஆன் 38:27)

February 04, 2009

அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அழகிய வழிமுறை!

"உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்" (அல்குர்ஆன்: 4:86)

February 03, 2009

பூமியில் என்றென்றும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை பெற முடியுமா?

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ أَفَإِن مِّتَّ فَهُمُ الْخَالِدُونَ

(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்றும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை. ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா? (அல்குர்ஆன்: 21:34)

February 02, 2009

நரகத்தைக் கூலியாகப் பெறும் போலிக் கடவுளர்கள்!

وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِّن دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ

இன்னும், அவர்களில் எவரேனும் "அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்" என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம். (அல்குர்ஆன்: 21:29)

February 01, 2009

அல்லாஹ் மிக தூயவன்!

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ

அவர்கள்; "அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்" என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள். (அல்குர்ஆன்: 21:26)