November 30, 2010

முஸ்லிம் பெண்களின் பர்தாவுக்கு ஏன் இத்தனை உலகளாவிய எதிர்ப்பு!

''தங்களின் கீழ்த்தரமான இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (பாவத்தின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என விரும்புகின்றனர்.'' (அல்குர்ஆன்: 4:27)

November 29, 2010

பெண்கள் முகத்தை அந்நிய ஆடவரை விட்டும் மறைத்துக் கொள்வதில் பேணுதல்!

''நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!'' (அல்குர்ஆன்: 33:59)


''நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள்வோம்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

November 28, 2010

இருதயங்களை தூய்மையாக்கும் செயல்!

''அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:53)

November 27, 2010

ஒரு முஸ்லிம் பெண் திரையின்றி இருக்க அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட ஆண்கள்!

''(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சையோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.'' (அல்குர்ஆன்: 24:31)

November 26, 2010

இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!

''உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.'' (அல்குர்ஆன் 81:8,9)


மார்க்க சகோதரியே! எந்த நோக்கத்திற்காகவும் இந்த கருக்கலைப்பு எனும் அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே. வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந்தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!

November 25, 2010

இஸ்லாமியப் பெண்ணே! எந்த நிலையிலும் கருக்கலைப்புச் செய்வதற்கு சூழ்ச்சி செய்யாதே!

''அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அந்தப் பெண்கள் நம்புவார்களாயின் தங்கள் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.'' (அல்குர்ஆன் 2:228)

November 24, 2010

மனைவியின் மாதவிடாயின் போது உடலுறவுக்காக கணவன் அவளை அணுகாதிருத்தல்!

''(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள் என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மையானவர்களையும் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 2:222)

November 23, 2010

பெண் தன் அழகு, அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் அல்லாஹ்வுக்கு அஞ்சுதல்!

பெண்கள் தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து ஏதேனும் வெளிப்படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டிதட்டி நடக்கவேண்டாம்.'' (அல்குர்ஆன் 24:31)

November 22, 2010

அல்லாஹ் தனது தூதரின் மூலம் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைதல்!

'இறைத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் அவர் உங்களைத் தடுத்தாரோ அதைவிட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' (அல்குர்ஆன் 59:7)

November 21, 2010

அல்லாஹ் ஆண்களுக்கு கடமையாக்கிய பெண்களுக்கான மஹ்ர் (திருமணக் கொடை)

''நீங்கள் (மணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால். அதைத் தாராளமாக மகிழ்வு டன் புசியுங்கள். (அதாவது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)'' (அல்குர்ஆன் 4:4)

November 20, 2010

சொத்து பங்கீட்டில் ஆண், பெண்ணுக்குகான அல்லாஹ்வின் அளவீடு!

''உங்கள் மக்களில் இரண்டு பெண்களுக்குக்கிடைக்கும் பங்கு ஓர் ஆணுக்குக் கிடைக்கும் என அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான், பெண்கள் மட்டுமே இருந்து, அவர்கள் இரண்டிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவர் (இறந்துபோனவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும், ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.'' (அல்குர்ஆன் 4:11)

November 19, 2010

சொத்தில் பெண்னுரிமை!

''பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகம் உண்டு, அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகம் உண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரி, இது (இறைவனால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.'' (அல்குர்ஆன் 4:7)

November 18, 2010

அல்லாஹ்வை அடைவது தக்வா எனும் பயபக்தியே!

(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்தற்காக அவனை நீங்கள் பெருமை படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்: 22:37)

November 17, 2010

குர்பானி இறைச்சி கொடுக்கப்பட வேண்டியவர்கள்!

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்: அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்கள் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன்: 22:36)

November 16, 2010

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்துப் பலியிடுதல்!

இன்னும் கால்நடை (ப் பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும்படிச் செய்வதற்காகவே குர்பான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன் தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிபடுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்: 22:34)

November 15, 2010

கொண்ட கொள்கையில் உறுதியாக நிலைத்து இருத்தல்!

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல்குர்ஆன்:41:30)

November 14, 2010

மனித படைப்பின் மூலப் பொருள்!

அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான். (அல்குர்ஆன்: 15:33)



November 13, 2010

மூஸா (அலை) அவர்களின் திருமணக் கொடை! (மஹ்ர்)

(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்; "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்." (அல்குர்ஆன்: 28:27)

November 12, 2010

’இத்தா’ வின் நெறிமுறைகள்!

உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா'விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள், ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.

தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும், ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும், எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும்படி) சிரமப்படுத்த மாட்டான், கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான். (அல்குர்ஆன்: 65:6-7)

November 11, 2010

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் அவன் பாதையில் முறைப்படி போராடுகிறோமா?

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன். பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன்: 22:78)

November 10, 2010

மனிதர்களில் சிலரைக் கொண்டு சமுதாயத்திற்கு நன்மையை நாடும் அல்லாஹ்!

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திருநாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 22:40)

November 09, 2010

இணைவைப்பவர்களின் இகழ்ச்சியான பேச்சைக் கேட்டால்....

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! (அல்குர்ஆன்: 15:97-98)

November 08, 2010

படைக்கப்பட்ட அனைத்தும் அல்லாஹ்வை சிரம் பணிகின்றன!

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன). (அல்குர்ஆன்: 13:15)

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
(அல்குர்ஆன்: 16:49)

November 07, 2010

வேதமுடையவர்களில் உள்ள நல்லவர்கள் குறித்து....

(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர். வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள். இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள். (அல்குர்ஆன்: 3:113)

November 06, 2010

’அர்ஷ்’ எனும் அரியாசனத்தின் அதிபதியாகிய அல்லாஹ்!

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

November 05, 2010

சிரமங்கள் ஏதுமற்ற இஸ்லாம் மார்க்கம்!

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன்: 22:78)

November 04, 2010

இறுதி நேரம் பற்றி அதிகம் ஆராயாது, நன்மைகளை அதிகம் செய்து தன்னை தயார்படுத்திக் கொள்ளல்!

தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.) (அல்குர்ஆன்: 21:39)

November 03, 2010

அல்லாஹ்வின் புகழ் வார்த்தைகளுக்கு அளவு ஏதும் உண்டா?

(நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!" (அல்குர்ஆன்: 18:109)

November 02, 2010

கொலை. (இறைச்சட்டம்)

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது. நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (அல்குர்ஆன்: 17:33)

November 01, 2010

அல்லாஹ்வை பெருமைப்படுத்த வேண்டிய முறை!

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)