September 30, 2010

அல்லாஹ்வாகிய...

அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்:57:3)

September 29, 2010

மறைவானவற்றின் அதிபதி அல்லாஹ்வே!

மறைவானவற்றின் சாவிகள் (அல்லாஹ்வாகிய) அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன்: 6:59)

September 28, 2010

அல்லாஹ்விடத்தில் அழியாத வியாபாரமாகிய மூன்று செயல்கள்!

எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (அல்குர்ஆன்: 35:29-30)

September 27, 2010

இறுதி இறை வேதமாகிய குர்ஆனின் பாதுகாவலன் அல்லாஹ்வே!

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 15:9)

September 26, 2010

துன்ப நிலைக்குப் பிறகு வரும் நல்ல நிலமையில் அல்லாஹ்வை மறக்கும் மனிதன்!

பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்; நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன" என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம். (அல்குர்ஆன்: 7:95)

September 25, 2010

அல்லாஹ்வால் பல அருட்கொடைகளைப் பெற்றிருந்தும் தங்கள் பாவங்களின் காரணத்தால் அழிந்த முந்தைய தலைமுறையினர்!

அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம். (அல்குர்ஆன்: 6:6)

September 24, 2010

மறு உலகத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தும் மற்றைய மதங்கள்!

யாரேனும் இஸ்லாத்தை விடுத்து வேறொரு மதத்தை விரும்பினால் அவனிடம் இருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மறுஉலகத்தில் அவன் நஷ்டம் அடைந்தோரில் ஒருவனாகவே இருப்பான்' (அல்குர்ஆன்: 3:80)

September 23, 2010

காலத்தை வீணடித்தவனின் பயனற்ற இறுதி நேர புலம்பல்!

'இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் இறைவா! நான் விட்டு வந்துள்ள உலகத்திற்கு என்னை மீண்டும் அனுப்பு. அப்படி அனுப்பினால் அங்கு நான் நற்செயல் செய்வேனே என்று கூறத் தொடங்குவான்!' (அல்குர்ஆன்: 23: 99-100)

September 22, 2010

படைத்தல், உணவளித்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் அல்லாஹ்வால் மாத்திரமே!

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (அல்குர்ஆன்: 30:40)

September 21, 2010

அல்லாஹ்வின் இரு நேசர்களுக்கு உணவளிக்க மறுத்த கிராமத்தார்!

பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) "நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே" என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்: 18:77)

September 20, 2010

அல்லாஹ் பரிபூரணப்படுத்திய மார்க்கத்தில் விலக்கப்பட்டவைகள்!

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும். இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 5:3)

September 19, 2010

அல்லாஹ்வை முழுமையாக நம்பி, தங்கள் உணவு பிரச்சனையை எளிதாக்கிக் கொண்ட இளைஞர்கள்!

(இணைவைக்கும்) அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்). (அல்குர்ஆன்: 18:16)

September 18, 2010

அல்லாஹ் தான் நாடியவருக்கு தான் விரும்பிய அளவு கொடுக்கிறான். தகுதியற்றவருக்கு விரிவாக்கிக் கொடுத்தால்...

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:30)

அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன். (அல்குர்ஆன்: 42:27)

September 17, 2010

அல்லாஹ்வை நிராகரிப்பவனுக்கான இவ்வுலக பங்கில் தடை ஏதும் இல்லை. ஆனால்...

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். (அல்குர்ஆன்: 7:37)

September 16, 2010

ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்காக....

'அவர்கள், எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான, எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பை அருள்வாயாக, அன்றியும், ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன் என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்'. (அல்ஹஷ்ர்:10).

September 15, 2010

அல்லாஹ் அளித்த அறிவை உண்மையைக் கொண்டு சிந்தித்தாலென்ன?

'வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி, ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?' 'அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும், நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை, அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை, அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக்கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்;. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்து கொள்வதில்லை' (யூசுப்:39-40).

September 14, 2010

மனிதன் கற்பனை செய்த பொய்யான தெய்வங்களின் பலவீனம்!

'மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள்!, நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனாலும், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனர்களே'. (அல்ஹஜ்:73).

September 13, 2010

மனிதன் தனக்கு தீமைப் பயப்பதையே உலகில் கவர்ச்சியூட்டப்பட்டதாக காண்கிறான்.

'(அதற்கு இப்லீஸ்,) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து, (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன் என்றான்'. (அல்ஹிஜ்ர்:39).

September 12, 2010

உலகின் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி உறுதியாக இருந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியான கூலி!

'நிச்சயமாக எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் எனக்கூறி, பின்பு (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, 'நீங்கள் பயமோ, கவலையோ படவேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்' (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்'. (அல்புஸ்ஸிலத்:30).

September 11, 2010

இறைத் தூதர்களின் பணி!

'மனிதர்கள் எல்லோரும் ஒரே சமூகத்தினராகவே இருந்தார்கள், அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி சொல்பவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிப்பவர்களாகவும் அம்மக்களுக்கு மத்தியில் அனுப்பினான், அத்துடன் அவர்களோடு, மக்கள் கருத்து வேறுபடுகின்றபோது, தீர்ப்பளிப்பதற்காக உண்மையைக் கொண்டுள்ள வேதத்தையும் அருளினான்'. (அல்பகறா:213).

September 10, 2010

மனிதனை வழிகேட்டில் வீழ்த்தி விடும் சிலை வணக்கம்!

'இப்றாஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவு கூறுங்கள், 'என் இறைவனே! (மக்காவாகிய) இந்நகரத்தைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக!! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!!!, என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிக்கேட்டில் வீழ்த்தி விட்டன'. (இப்றாஹீம்:35).

September 09, 2010

அல்லாஹ்விடம் உரிமைகள் ஏதுமற்ற பொய்யான கடவுளர்கள்!

'(நபியே இந்த இணைவைப்பாளர்களிடம்)நீர் கூறும்! அல்லாஹ்வை விடுத்து, உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ, அவர்களை அழைத்துப் பாருங்கள்!, அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உரிமையில் அவர்கள் பங்காளிகளாவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை'. (ஸபஃ:22).

September 08, 2010

அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கினால் இரு உலகிலும் கேடுதான்!

'(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையோ, தீமையோ அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்' என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடுதான். நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?' (என்று இப்ராஹீம் கூறினார்)'. (அல்அன்பியா:66-67).

September 07, 2010

அல்லாஹ்வை மட்டுமே வணங்குகிறவர்கள் இவற்றுக்கு ஒருபோதும் தலை தாழ்த்த மாட்டார்கள்!

'இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது (சிரவணக்கம்) செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்'. (அல்புஸ்ஸிலத்:37).

September 06, 2010

உண்மை தெரிந்தும் ஏன் இந்த மதிமயக்கம்?

'நீங்கள் அறிந்திருந்தால், இப்பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள், (அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக!. 'ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? என்றும் நீர் கேட்டால், 'அல்லாஹ்தான்' என்று அவர்கள் சொல்வார்கள், (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி நடக்கமாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக!. 'எல்லாவற்றின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது?, யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாகவும், அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாது என்றுமிருக்கிறதோ அவன் யாரென்று, நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்) என்று நீர் கேட்பீராக. அதற்கவர்கள் (இது) 'அல்லாஹ்வுக்கே' (உரியது) என்று கூறுவார்கள். (உண்மை தெரிந்தும்) 'நீங்கள் ஏன் மதிமயங்கியிருக்கிறீர்கள்' என்று (நபியே!) நீங்கள் கேட்பீராக. (அல்முஃமினூன்: 84-89).

September 05, 2010

மனிதனுக்கு அல்லாஹ்வால் மட்டுமே ஆகக் கூடிய செயல்கள்!

'அவ்வாறாயின், நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்று கூறினார். நீங்களும் உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்). நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே! - அகிலங்களின் இறைவனைத் தவிர, (அவனே காப்பவன்) அவனே என்னைப் படைத்தான், பின்னும் அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். அவனே எனக்கு உணவளிக்கிறான், அவனே எனக்குக் குடிபானம் தருகிறான், நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான், பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான், நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக, என் குற்றங்களை மன்னிப்பவனும் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்'. (அஷ்ஷுஅறாஉ:75-82).

September 04, 2010

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வை நெருங்க இடைத்தரகர்கள் தேவையா?

'அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது, இன்னும் அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், 'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை' (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்'. (அஸ்ஸுமர்:3).

September 03, 2010

இணைவைத்தல்!

'தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்யமுடியாத, அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள், இன்னும் அவர்கள், 'இவை, எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள். அதற்கு நீர், 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக்கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட அவன் மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும்'. (யூனுஸ்:18).

September 02, 2010

மறுமையை நம்பாத இதயங்களின் அறிவற்ற, கற்பனை எண்ண ஓட்டம்

'மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள், நமது இந்த உலக வாழ்க்கையைத்தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது, நாம் இறக்கிறோம், ஜீவிக்கிறோம், காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என்று கூறுகிறார்கள், அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை'. (அல்ஜாஸியா:24).

September 01, 2010

இவைகளை நம்பாதவர் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டார்!

'முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவனுடைய தூதர் மீது அவன் இறக்கிய (இவ்)வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறங்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெதுதூரம் சென்றுவிட்டார்'. (அந்நிஸா:136).