December 31, 2010
அல்லாஹ்விடம் வழங்கிய உறுதிமொழியை புறந்தள்ளிய இஸ்ரவேலர்கள்!
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் - எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது. (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள். மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள். ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டு விட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன்: 2:83)
December 30, 2010
கற்பாறையை விட கடினமாகி இறுகி விட்ட இதயங்கள்!
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின. (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக் கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன்: 2:74)
December 29, 2010
உலகில் நெறிதவறி வாழ்ந்தவர்களுக்கு பரிந்துரை, பதிலீடு, உதவி ஏதுமற்ற ஓர்நாள்!
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:48)
December 28, 2010
உலகில் காணப்படும் சகலமும் மனிதனுக்காகவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டன!
(அல்லாஹ்வாகிய) அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:29)
December 27, 2010
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:28)
December 26, 2010
சுவனச் சோலைகளில் உள்ள கனிவகைகளின் தோற்றம் எவ்வாறு இருக்கும்?
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு. அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன. இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்குர்ஆன்: 2:25)
December 25, 2010
நாங்களும் முஸ்லிம்கள் தான் என்று போலியான விசுவாசம் காட்டுவோரே, உங்களுக்கான உதாரணத்தை பாருங்கள்!
இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்து விட்டான். இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (அல்குர்ஆன்: 2:17)
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:18)
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம். (இதில் அகப்பட்டுக் கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:19)
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள். அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள். மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (அல்குர்ஆன்: 2:20)

December 24, 2010
(தக்வா) இறையச்சமும், தூய்மையும் வேண்டுமா?
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம். (அல்குர்ஆன்: 2:21)
December 23, 2010
தம் மடமையை தாமே அறியாத அறிவுஜீவிகளான மூடர்கள்!
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள். (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன்: 2:13)
December 22, 2010
இதய நோயை அதிகப்படுத்தும் பொய்யுரைத்தல்!
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது. அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான். மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 2:10)
December 21, 2010
அல்லாஹ்வை நிராகரிப்போரின் பார்வை மீது இருக்கும் நன்மையை விளங்கிக் கொள்ள முடியாத திரை!
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான். இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது. மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன்: 2:7)
December 20, 2010
அல்லாஹ்வை பயந்தவருக்கு நேர்வழி காட்டும் குர்ஆன்!
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன்: 2:2)
December 19, 2010
’ஹுதமா’ என்றால் என்ன?
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். (104:2)
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:3)
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். (104:4)
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (104:5)
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். (104:6)
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். (104:7)
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். (104:8)
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (104:9)

December 18, 2010
முறை தவறி சேர்த்த செல்வத்தால் நரகத்தைக் காணப்போகும் தீயவர்கள்!
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- (102:1)
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:2)
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:3)
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (102:4)
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). (102:5)
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். (102:6)
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். (102:7)
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (102:8)

December 17, 2010
’ஹாவியா’ என்றால் என்ன?
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- (101:6)
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார். (101:7)
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ- (101:8)
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான். (101:9)
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது? (101:10)
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். (101:11)

December 16, 2010
குதிரையின் எஜமான விசுவாசம் - தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி கெட்ட மனிதன்
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் மீது சத்தியமாக- (100:1)
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், (100:2)
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- (100:3)
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், (100:4)
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக- (100:5)
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (100:6)
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். (100:7)
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:8)
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- (100:9)
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- (100:10)
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். (100:11)

அல்குர்ஆன்: அத்தியாயம்-100
December 15, 2010
அல்லாஹ்வின் பாலும், தூதரின் பாலும் அழைத்தால் முஃமின்களின் வார்த்தை எப்படி இருக்கும்?
”நிச்சயமாக முஃமின்களின் வார்த்தை எப்படி இருக்குமென்றால் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்வின் பாலும், தூதரின் பாலும் அவர்களை அழைத்தால், கேட்டோம், கட்டுப்பட்டோம் என்று கூறுவார்கள். அவர்கள் தான் வெற்றி பெற்றோர்” (ஸூரா அந்நூர்-வசன எண்-51)
December 14, 2010
வீணான வார்த்தை என்பது இங்கு பாடல்களும், இசையுமே ஆகும்.
“அறிவற்ற, அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுக்கக்கூடிய வீணான வார்த்தைகளை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு அழிவு தரும் வேதனை இருக்கிறது” (ஸூரா லுக்மான்-வசன எண்-6)
December 13, 2010
தீமைக்கான கூலியிலும் சம உரிமையே பெண்ணுக்கு!
''நயவஞ்சகத் தன்மையுள்ள ஆண்களையும், நயவஞ்சகத் தன்மையுள்ள பெண்களையும், இணை வைக்கின்ற ஆண்களையும், இணை வைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காக.'' (அல்குர்ஆன் 33:73)
December 12, 2010
பெண்கள் புரியும் நன்மை தீமைக்குரிய கூலியைப் பெறுவதில் ஆணுக்குச் சமமாகவே அல்லாஹ் ஆக்கியிருக்கிறான்!
''இறைநம்பிக்கையுள்ள ஆணோ, பெண்ணோ யார் நற்செயலைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) தூயமுறையிலான வாழ்க்கையை வாழச் செய்வோம். இன்னும், (மறுமையில்) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.'' (அல்குர்ஆன் 16:97)
December 11, 2010
அனைத்துக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ் தனது வல்லமையை பறைசாற்றும் வசனங்கள்!
- பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப்படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
- நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
- ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கி வைப்பதில்லை.
- இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
- நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
- உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம். (அல்குர்ஆன்: 15: 19லிருந்து 24வரை)
December 10, 2010
ஏழு வாசல்களைக் கொண்ட நரகம்
நிச்சயமாக (ஷைத்தானாகிய உம்மைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும். (அல்குர்ஆன்: 15:43-44)
December 09, 2010
அல்லாஹ்வையன்றி உலகில் வழிபாட்டுக்குரிய அனைத்தும் பொய்யானவையே!
இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன். (அல்குர்ஆன்: 22:62)
December 08, 2010
அல்லாஹ்விடத்தில் ஒருநாள் என்பது இவ்வுலக கணக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானது!
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். (அல்குர்ஆன்: 22:47)
December 07, 2010
இணைவைப்பு எனும் செயல் மனிதனுக்கு பெரும் கேடாகவே முடியும்!
அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன்: 22:31)
December 06, 2010
உலக வாழ்வில் கலிமா தையிபாவின் பக்கம் வழிகாட்டப் பெற்றிருந்தவர்களின் மறு உலக வெகுமதி!
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும். (அல்குர்ஆன்: 22:23)
December 05, 2010
இரு உலகிலும் நஷ்டத்தை அடையும் உறுதியற்ற ஆன்மா!
இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன்: 22:11)
December 04, 2010
அறிவற்ற, ஆணவத் தர்க்கம் பெற்றுத்தரும் இழிவுமிக்க வேதனை!
இன்னும்; கல்வி ஞானமோ, நேர்வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது. கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். (அல்குர்ஆன்: 22:8-9)
December 03, 2010
அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையான உலகின் இறுதி நாள்!
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல. ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்குர்ஆன்: 22:2)
December 02, 2010
படைத்தவனின் பண்புகளை, படைப்பினங்களுக்கு ஒப்பிடுவதை, அல்குர்ஆன் தடைசெய்கிறது
'அவனைப் போன்று எப்பொருளும் இல்லை'. (அஷ்ஷூறா:11).
'(பெயர்களில், வல்லமைகளில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?'. (மர்யம்:65).
'அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை'. (அல்இக்லாஸ்:4).
'ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்'. (அந்நஹ்ல்).
'அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்'. (அல்பகறா:22).

December 01, 2010
பெண்கள் தக்க காரணமின்றி வீட்டை விட்டு வெளியேறாதிருத்தல்!
''நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் பெண்கள் திரிந்து கொண்டிருந்தது போல் நீங்கள் திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைபிடித்துத் தொழுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.'' (அல்குர்ஆன்: 33:33)
Subscribe to:
Posts (Atom)