Pages

December 31, 2011

முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்காத பிற சமூக மக்களோடு உறவாடுதல்!

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன்:60:8)

December 30, 2011

தீமையை அங்கீகரித்து, சகித்துக் கொள்வது இறை நிராகரிப்பின் இலட்சணமே!

இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள், தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் வரம்பு கடந்தும், பாவம் செய்தும் வந்தனர். விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவை நிச்சயமாக மிகத் தீயவை. (அல்குர்ஆன்: 5:78-79)

December 29, 2011

இவர்கள் மத பக்தியற்ற இறை நிராகரிப்போர்!

...தங்கத்தையும், வெள்ளியையும் பதுக்கி வைத்துக் கொண்டு அவற்றை இறைவனுடைய பாதையில் செலவிடாதவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மிகக் கொடூரமான தண்டனைப் பற்றி அறிவிப்பீராக! (அல்குர்ஆன்: 9:34)

December 28, 2011

சுகவாசியான செல்வந்தர்கள்! தீர்ப்பு நாளில் இறைவனின் இடது புறத்தில் வேதனையில் உழல்பவர்கள்!

நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம். ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம். (அல்குர்ஆன்: 17:16)

December 27, 2011

இறைத்தூதர்களை நிராகரித்த ஆடம்பரமும் வீண்விரயமும் கொண்ட செல்வந்தர்கள்!

அன்றியும் அச்சமூட்டி எச்சரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; "நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிரரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை. (அல்குர்ஆன்: 34:34)

December 26, 2011

சமூக அநீதியை எதிர்த்து போராடுதலும் ஒரு புனிதப் போரே!

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள். (அல்குர்ஆன்: 4:75)

December 25, 2011

பேராசையிலிருந்து ஆத்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிறருக்குக் கொடுக்கப்பட்ட செல்வத்தின் மீது நப்பாசை கொள்ளாதிருத்தல்!

மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:32)

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர். (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (அல்குர்ஆன்: 20:131)

December 24, 2011

அநீதிக்கு தலைவணங்குவோர்களுக்கும், அநீதிக்கு பின் நிற்பவர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் தீவினை சூளும்!

(அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) "நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?" என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான். சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள். (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன். ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:97-99)

December 23, 2011

ஜும்ஆவுடைய நாளில் தொழுகை நேரத்தில் வியாபாரத்தை பொருட்படுத்தாது தொழுகைக்காக விரைதல்!

“இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (அல்குர்ஆன்: 62:9)

December 22, 2011

ஈமான் கொண்ட ஆண் பெண் இருவருக்குமான இறைக்கட்டளை!

“(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் படியும் தங்களுடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்” “மேலும் (நபியே!) நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தம் பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கட்டும்” (அல்குர்ஆன்: 24:30-31)

December 21, 2011

அல்லாஹ்வை நிராகரிப்போரின் நற்செய்கைகளின் நிலை என்ன?

“நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!.” (அல்ஜுமர்: 65-66)

December 20, 2011

இணைவைப்பு எனும் பேராபத்து!

“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)

December 19, 2011

இந்த உல்லாச உலகை விளையாட்டுக்கான நிலையில் அல்லாஹ் படைக்கவில்லை! உங்கள் உல்லாசம் உங்களுக்கு சோதனையே!

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் (அல்லாஹ்வாகிய) நாம் படைக்கவில்லை. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம். (அல்குர்ஆன்: 21:16-17)

December 18, 2011

இறைமறுப்பு எனும் ஆணவம் பெற்றுத் தரும் எரிநரகின் வேதனை!

(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான். அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது. கியாம (தீர்ப்பு) நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன்: 2:9)

December 17, 2011

அல்லாஹ்வுக்கு அச்சம் கொள்ள மறுக்கும் மனித ஆணவம்!

“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும். (அல்குர்ஆன்: 2:206)

December 16, 2011

மனிதர்கள் என்ற போர்வையில் நடமாடும் மாக்கள்!

இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 22:3)

December 15, 2011

மனிதனுடைய கைகள் முன்னரே முற்படுத்தி அனுப்பி வைத்த அமல்களுக்கு தக்க கூலியே மறுமையில்!

”உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்). (அல்குர்ஆன்: 22:10)

December 14, 2011

தொழுகையில் இதுதான் மிக முக்கியமான அம்சம்!

அல்லாஹ்வின் திரு முன் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்” (அல்குர்ஆன்: 2:238)

“திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களின் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்” (அல்குர்ஆன்: 23:1,2)

December 13, 2011

துற்குறி, அபசகுனம், நல்லநேரம் பார்த்தல் இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தலாகும்.

“அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (அல்குர்ஆன்: 7:131)

December 12, 2011

இறை வசனங்களை செவிதாழ்த்திக் கேட்காது கேலி, கிண்டல் செய்யும் அக்கிரமக்காரர்களுடன் சேராதிருத்தல்!

“(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால் அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் ஒதுங்கி விடும். மேலும் எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்தி விட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர். (அல்குர்ஆன்: 6:68)

December 11, 2011

வணக்க வழிபாடுகளில் முகஸ்துதியை அறவே தவிர்த்தல்!

“இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டவர்களாகவே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூறுகிறார்கள்” (அல்குர்ஆன்: 4:142)

December 10, 2011

ஹலால், ஹராமை குர்ஆன், சுன்னாஹ் ஒளியில் உற்றுநோக்கி தெளிவு பெறுதல்!

“(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) சிலவற்றை விலக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை ஆகுமாக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே! (நபியே! இவர்களிடம்) கேளுங்கள் ‘இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கிறீர்களா?’ (அல்குர்ஆன்: 10:59)

December 09, 2011

கஷ்டம், துன்பம், உதவி, பாதுகாப்புத் தேடுதல் இவைகளை அல்லாஹ்விடம் மட்டுமே வணக்கத்தின் மூலம் இறைஞ்சுதல்!

“உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (அல்குர்ஆன்: 17:23)

December 08, 2011

அல்லாஹ்வின் அன்பை, அருளை, கருணையை தூரமாக்கும் இழிச்செயல்!

“திண்ணமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்” (அல்குர்ஆன்: 4:48)

December 07, 2011

அல்லாஹ்வால் மனிதனுக்கு விலக்கப்பட்டவைகளில் நிர்பந்தமான நேரங்களில் இறைக் கருணை!

“நீங்கள் நிர்பந்திக்கப்பட்ட சூழ்நிலைகளில் அன்றி பிற நேரங்களில் எவை எவை உங்களுக்கு விலக்கப்பட்டவை என்பதை அல்லாஹ் உங்களுக்கு விவரித்துக் கூறியுள்ளான்” (அல்குர்ஆன்: 6:119)

December 06, 2011

பொருளீட்டுவதில் விலக்கல்!

“அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாகவும் வட்டியை ஹராமாகவும் ஆக்கியுள்ளான்” (அல்குர்ஆன்: 2:275)

December 05, 2011

மனிதன் திருமணம் முடித்துக்கொள்ள அல்லாஹ்வால் விலக்கப்பட்டவர்கள்!

“(பின் வரும் பெண்களை மணம்புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள், மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னால் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடியில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணமாகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து அவர்களின் புதல்வியரை மணந்து கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை.

மேலும் உங்கள் முதுகந்தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன). ஆனால் இதற்கு முன் நடந்து விட்டதைத் தவிர. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:23)

December 04, 2011

மனிதனுக்கான உணவு வகைகளில் அல்லாஹ்வால் விலக்கப்பட்டவைகள்!

“தானாக செத்தவைகள், இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டவை, கீழே விழுந்து செத்தவை, கொம்பால் முட்டப்பட்டு செத்தவை, கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்டவை ஆகிய யாவும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. எவற்றை நீங்கள் உயிருடன் அறுத்து விட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலிபீடங்கள் மீது அறுக்கப்பட்டவையும், குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (அல்குர்ஆன்: 5:3)

December 03, 2011

அல்லாஹ்வின் விலக்கல்களில் முதன்மையானது!

“(நபியே!) கூறும்! வாருங்கள் இறைவன் உங்களுக்கு விலக்கியிருப்பவற்றை நான் கூறுகிறேன். யாரையும் எதனையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொன்று விடாதீர்கள்” (அல்குர்ஆன்: 6:151)

December 02, 2011

இறைச் சட்டங்களை நாம் முதலில் அறிந்து, செயல்படுத்திக் கொண்டு மற்றவருக்கு எடுத்தோதுதல்!

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ, அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:116)

December 01, 2011

நீடித்து நிலைத்து நிற்கும் இறைக் கட்டளைகள்!

“உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும், நீதியும் முழுமையாக உள்ளன. அவனுடைய கட்டளைகளை மாற்றக் கூடியவர் எவருமிலர். அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறான்” (அல்குர்ஆன்: 6:115)