ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்: 2:183)
July 31, 2011
மனிதனிடம் தூய்மையைக் கொண்டு வரும் நோன்பு!
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்: 2:183)
July 30, 2011
நோன்பின் மூலம் அல்லாஹ் ,மனிதனிடம் எத்தகைய செயலை எதிர்பார்க்கின்றான்!
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).(அல்குர்ஆன்: 2185)
July 29, 2011
மிக மேலான நன்மைகளையுடைய வெள்ளிக்கிழமை (ஜும்ஆ)
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ (வெள்ளிக்கிழமை) உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். பின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல்குர்ஆன்: 62:9-10)
July 28, 2011
யுக முடிவின் நெருக்கத்தில்...
‘வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக்கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும். இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்’ (அல்குர்ஆன் 44:10,11)
July 27, 2011
பார்வைகள் கீழ்தாழ்ந்து. பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து மனிதன் வெளிப்படும் கஷ்டமான நாள்!
‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)
‘இப்பூமி தூள் தூளாக்கப்பட்டதும் உமது இறைவன் வருவான். வானவர்களும் அணியணியாக வருவார்கள்’ (அல்குர்ஆன் 89:21,22)
சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)
‘அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்’ (அல்குர்ஆன் 75:22,23)
அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் பற்றிச் செல்வார்கள். அதில் எத்தகைய கோணலும் இருக்காது. மேலும் ரஹ்மானுக்கு (அஞ்சி அவனுக்கு) முன் அனைத்து சப்தங்களும் அடங்கி விடும். காலடி ஓசை தவிர வேறு ஓசை எதனையும் நீர் கேட்க மாட்டீர்! (அல்குர்ஆன் 20:108)
எனவே நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய ஒன்றுக்காக (விசாரணைக்காக) அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காபிர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 54:6-8)
‘இப்பூமி தூள் தூளாக்கப்பட்டதும் உமது இறைவன் வருவான். வானவர்களும் அணியணியாக வருவார்கள்’ (அல்குர்ஆன் 89:21,22)
சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)
‘அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்’ (அல்குர்ஆன் 75:22,23)
அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் பற்றிச் செல்வார்கள். அதில் எத்தகைய கோணலும் இருக்காது. மேலும் ரஹ்மானுக்கு (அஞ்சி அவனுக்கு) முன் அனைத்து சப்தங்களும் அடங்கி விடும். காலடி ஓசை தவிர வேறு ஓசை எதனையும் நீர் கேட்க மாட்டீர்! (அல்குர்ஆன் 20:108)
எனவே நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய ஒன்றுக்காக (விசாரணைக்காக) அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காபிர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 54:6-8)
July 26, 2011
சிந்திக்கும் தன்மையும், நீண்ட ஆயுளும் கொடுக்கப்பட்டும் உண்மை இறைவனை அறியாதவர் அநியாயக்காரரே!
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும், ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார். ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்! ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்று கூறுவான்). (அல்குர்ஆன்: 35:37)
July 25, 2011
மறைவான விஷயங்களை பார்த்தும் கேட்டும் கொண்ட பிறகு கொள்ளும் நம்பிக்கை பயன் தருமா?
‘எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டுக் கொண்டோம். ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்’ என்று சொல்லும் போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).
மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் ‘நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும், (தீய) மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்’ என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள். நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!’ (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). (அல்குர்ஆன்: 32:12-14)
மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் ‘நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும், (தீய) மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்’ என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள். நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!’ (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). (அல்குர்ஆன்: 32:12-14)
July 24, 2011
உண்மை இறைவனை, சத்திய வேதத்தை மறுத்து, தீயதான ஓய்விடத்தை பெற்றவர்களின் கேடுகெட்ட குடிநீர் எது?
தெளிவாக கூறிவிடும்: (குர்ஆனாகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும்। இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கைக் கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம்। அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன। அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடுகெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் மிகவும் தீயதாகும். (அல்குர்ஆன்:18:29)
July 23, 2011
வேத வசனங்களை எது ஒன்றுக்காகவும் மறைக்காது உள்ளது உள்ளபடி எடுத்து சொல்லிவிடல்!
(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல்வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. (அல்குர்ஆன்: 18:27)
July 22, 2011
அல்லாஹ்வை அவனுடைய வல்லமையைக் கொண்டு பெருமைப் படுத்துதல்!
"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்। அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறிவீராக. இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர். மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக. "அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும்,எந்தவித பலகீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:110)
July 21, 2011
அல்லாஹ்வையன்றி எவற்றையெல்லாம் மனிதன் வணங்கி வழிபட்டானோ அவைகள் அனைத்தும் அவனை கைசேதப்படுத்தும் ஒருநாள்!
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி; "நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்" என்று சொல்வோம். பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கி விடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்" நீங்கள் எங்களை வணங்கவேயில்லை" என்று கூறிவிடும். "நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன். நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்" (என்றும் அவை கூறும்). (அல்குர்ஆன்:10:28-29)
July 20, 2011
வசதியான செல்வநிலை மனிதனிடம் ஏற்படுத்தும் தீய மாற்றம்!
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது. "திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதையெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன்:10:21)
July 19, 2011
அல்லாஹ்! அவனன்றி வேறொரு நாயன் இல்லை!
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள், "இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; "வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும். (அல்குர்ஆன்:10:18)
July 18, 2011
குர்ஆனாகிய இறைவேதத்தில் மாற்றம் கொண்டு வர எவருக்கேனும் உரிமை உள்ளதா?
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்:10:15)
July 17, 2011
இறைபயமில்லாமல் உலக வாழ்வில் மட்டும் திருப்தியடைந்தால்....?
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும், இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ - அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான். (அல்குர்ஆன்:10:7-8)
July 16, 2011
மெய்யான அல்லாஹ்வின் வாக்குறுதி!
நீங்கள் அனைவரும் (அல்லாஹ்வாகிய) அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன். ஈமான் (நம்பிக்கை) கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:10:4)
July 15, 2011
இறைநம்பிக்கையும், இறையச்சமும் கொண்டுவரும் இறை அருட்கொடைகள்!
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன்:7:96)
July 14, 2011
அல்லாஹ்வின் நேசிப்பு வேண்டுமா? இச்செயல்களை புறந்தள்ளுவோம்!
(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைகாரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 31:18)
July 13, 2011
இணை வைக்குமாறு ஏவும் சொல்லை மட்டும் புறக்கணித்து விட்டு மற்ற அனைத்து விஷயங்களிலும் பெற்றோருக்கு முழுமையாகக் கட்டுப்படுதல்!
நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே, "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள். (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன்: 31:14-15)
July 12, 2011
இறைநம்பிக்கையை மெய்ப்படுத்தும் சான்றுகள்!
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? (அல்குர்ஆன்: 21:30)
July 11, 2011
இறைநம்பிக்கை பெற்றுத்தரும் உயர்ந்த தங்குமிடம்!
இறைநம்பிக்கைக் கொண்டு நற்செயகள் புரிகின்றவர்களோ -- திண்ணமாக, நாம் நற்செயல் புரிவோரின் கூலியை வீணாக்குவதில்லை! அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்க காப்புகள் அணிவிக்கப்படும்.* மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சைநிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்து இருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும். (அல்குர்ஆன்:18:30-31)
*பண்டைக்காலங்களில் அரசர்கள் தங்கக்காப்புகள் அணிவார்கள். சுவன வாசிகள் அணியும் பொருள்களில், இதனையும் ஒன்றாக கூறுவதன் நோக்கம் இவ்வாறு விளக்கிக் காண்பிப்பதாகும். அதாவது, அங்கு அவர்களுக்கு அரச ஆடைகள் அணிவிக்கப்படும். இறை நிராகரிப்பாளனும் தீயவனுமான ஓர் அரசன் அங்கு இழிந்தவனாகி விடுவான். ஆனால், நம்பிக்கையாளரும் ஒழுக்கசீலருமான ஒரு கூலியாளி அங்கு அரசர்களின் பெருமையோடும் கண்ணியத்தோடும் விளங்குவார்.
*பண்டைக்காலங்களில் அரசர்கள் தங்கக்காப்புகள் அணிவார்கள். சுவன வாசிகள் அணியும் பொருள்களில், இதனையும் ஒன்றாக கூறுவதன் நோக்கம் இவ்வாறு விளக்கிக் காண்பிப்பதாகும். அதாவது, அங்கு அவர்களுக்கு அரச ஆடைகள் அணிவிக்கப்படும். இறை நிராகரிப்பாளனும் தீயவனுமான ஓர் அரசன் அங்கு இழிந்தவனாகி விடுவான். ஆனால், நம்பிக்கையாளரும் ஒழுக்கசீலருமான ஒரு கூலியாளி அங்கு அரசர்களின் பெருமையோடும் கண்ணியத்தோடும் விளங்குவார்.
July 10, 2011
இவ்வகை இறைவெறுப்பு செயல்களில் இருப்போர்களிடம் அடிபணியாதிருத்தல்!
எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனதைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களை விட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவு கூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ -- எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ -- எவன் தன் செயல் முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டிருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்படியாதீர்! (அல்குர்ஆன்:18:28)
July 09, 2011
இறைவேதமாகிய குர்ஆனை நிராகரிப்போரின் ஓய்விட சூழல்!
(நபியே!) தெளிவாக கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கைக் கொள்ளட்டும். நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடுகெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் மிகவும் தீயதாகும். (அல்குர்ஆன்:18:29)
July 08, 2011
பரிட்சைக்கான சோதனையே இவ்வுலக வாழ்க்கை!
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்றும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை. ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழ போகிறார்களா?
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரிட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 21:34-35)
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரிட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 21:34-35)
July 07, 2011
சிறந்த சமுதாயம்!
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்:3:110)
July 06, 2011
இறை அருளாகிய இஸ்லாமிய சகோதரத்துவம்!
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன்: 3:103)
July 05, 2011
அல்லாஹ்விடம் மட்டுமே சரணடையும் ஒரு முஸ்லிமின் விசாலமான நம்பிக்கை!
அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 3:84)
July 04, 2011
அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை தேடுவோர் தோல்வியே காண்பர்!
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்: 3:83)
July 03, 2011
நம்பி ஒப்படைக்கப்பட்ட அடுத்தவரின் அமானிதப் பொருளில் மோசம் செய்யாதிருத்தல்!
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான். மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள். (அல்குர்ஆன்: 3:75)
July 02, 2011
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தான் நாடியதை வழங்குகின்றான். இங்கு மனித விருப்பு வெறுப்புகளுக்கு கிஞ்சிற்றும் இடமில்லை!
(யூத, கிறிஸ்தவர்களாகிய இவர்கள் )"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும். உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான். அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன், யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 3:73)
July 01, 2011
நீங்கள் தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைகளை அவர்களின் உண்மையான தந்தையின் பெயர்கூறி அழைத்தலே அல்லாஹ்விடத்தில் நீதமான நேர்வழியாகும்!
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான். (அல்குர்ஆன்: 3:34)
Subscribe to:
Posts (Atom)




