Pages

March 31, 2011

ஒவ்வொரு மனிதனுக்குமான அல்லாஹ்வின் கவனிப்பு!

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், "குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. (அல்குர்ஆன்: 10:61)

March 30, 2011

மனிதன் மகிழ்ச்சியடைய வேண்டிய இறுதி இறைவேதம்!

"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (குர்ஆனாகிய இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 10:58)

March 29, 2011

அல்லாஹ்வின் சந்திப்பை மறுப்பவர்களுக்கு அவனின் கால அவகாசம்!

நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும். எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம். (அல்குர்ஆன்: 10:11)

March 28, 2011

மனிதன் நல்லுணர்ச்சி பெற இந்த சிந்தனை அவசியம்!

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான். (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 10:03)

March 27, 2011

அல்லாஹ்வின் பொறுமை!

(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான். ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள். (அல்குர்ஆன்: 18:58)

March 26, 2011

உலகின் இறுதி நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே!

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளையதினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை. தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்குர்ஆன்:31:34)

March 25, 2011

உறவுகளின் உதவி ஒத்தாசைகள் பலனளிக்காத ஓர் நாள்!

மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது. நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும். (அல்குர்ஆன்:31:33)

March 24, 2011

மனிதனின் அகத்திலும், புறத்திலும் இருக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகளை சிந்தனை செய்தல்!

நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட்கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும், நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குர்ஆன்:31:20)

March 23, 2011

ஞானம் என்பது அல்லாஹ்விடத்திலிருந்து மட்டுமே!

இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். "அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான். இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்". (அல்குர்ஆன்:31:12)

March 22, 2011

ஒவ்வொரு பொருளும் தன்னைத்தானே படைத்துக் கொண்டது என்ற நாத்திக கொள்கையுடையோர் அநியாயக்காரர்களே!

அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகைவகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம். "இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்" (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன்:31:10-11)

March 21, 2011

அல்லாஹ்விடத்தில் பெருமைக் கொண்டு முகம் திருப்பிக் கொண்டவனுக்கான நற்செய்தி!

அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனே போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத்தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான். ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன்:31:7)

March 20, 2011

அல்லாஹ்வின் இழிவான வேதனையை பெற்றுத் தரும் சில இழிச்செயல்கள்!

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்). இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன்:31:6)

March 19, 2011

முந்தைய சமுதாய அழிவுகளிலிருந்து படிப்பினை பெறுபவரே அறிவுடையோர் ஆவார்!

இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர்வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள். நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன்:20:128)

March 18, 2011

அல்லாஹ்வின் உபதேசமான குர்ஆனை புறக்கணிப்பவர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கையே உலகில்!

எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று கூறினான். (அல்குர்ஆன்:20:124)

March 17, 2011

கடந்துபோன சமுதாயங்களிலிருந்து அறிவுரையும், நினைவூட்டும் நல்லுபதேசமும் கொண்ட இறுதி இறைவேதம்!

(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன்:20:99)

March 16, 2011

நேர்வழிக்காக மனிதன் முயற்சித்தால்...

"மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான். இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்." (அல்குர்ஆன்:19:76)

March 15, 2011

நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் குறிப்பிடும் உதாரணம்!

“நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத்தைக் கூறியுள்ளான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) நல்ல மரத்தை போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப்பதிந்தும், அதன் கிளையும் வானளாவியும் இருக்கிறது.
அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
(இப்ராஹீம்: (24-25)

March 14, 2011

அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்களின் நஷ்டம்!

(அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள். அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள். மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை. (அல்குர்ஆன்: 10:45)

March 13, 2011

முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!

”எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)

March 12, 2011

முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 43:23-24)

March 11, 2011

சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!

”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர்.

நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன்: 21:52-54)

March 10, 2011

மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!

”அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)

March 09, 2011

மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)

March 08, 2011

முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்....?

”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)

March 07, 2011

அல்லாஹ்வாகிய அவனுக்கு ஒப்பானது உலகில் ஒன்றுமேயில்லை!

"அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். உங்களிலிருந்தே (உங்கள்) ஜோடிகளையும் அவன் உங்களுக்காகப் படைத்தான். கால்நடைகளையும் ஜோடி-ஜோடியாகப் படைத்தான். உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்" (அல்குர் ஆன் 42:11).

March 06, 2011

குர்ஆன் மனிதர்களுக்கு அருளப்பட்டதின் உயரிய நோக்கம்!

”மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு நீர் விளக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வேதத்தை நபியே நாம் உம்மீது இறக்கி வைத்தோம்” (அல்குர்ஆன்:16:44).

March 05, 2011

குர்ஆனாகிய இவ்வேதம் இந்நாகரீக காலத்திற்கு ஒவ்வாது எனக் கூறுவோர், அல்லாஹ்வின் சந்திப்பை மறுப்பவர்களே!

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் ”இது அல்லாத வேறு குர்ஆனை கொண்டு வருவீராக. அல்லது இதை மாற்றியமைப்பீராக” என்று நமது (மறுமை) சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர்.

நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்துவிட்டால் மகத்தான (மறுமை) நாளின் வேதனையை அஞ்சுகிறேன் என நபியே கூறுவீராக! (அல்குர்ஆன்:10:15).

March 04, 2011

அல்லாஹ்வால் பல பாகங்களாக பிரித்தமைக்கப்பட்ட இறை வேதம்!

மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு, இந்தக் குர்ஆனைப் பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன்:17:106).

March 03, 2011

குர்ஆனைக் கண்டும் காணாமல் வாழும் சமூகமே! எச்சரிக்கை!

எவர் எனது போதனையைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

என் இறைவா! நான் பார்வையுடையவனாக (உலகில்) இருந்தேனே ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் என்று அவன் (மறுமையில்) கேட்பான்.

அப்படித்தான், நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ (உலகில்) மறந்தவாறே, (வாழ்ந்தாய்) இன்று (நீயும்) மறக்கப்படுவாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (அல்குர்ஆன்: 20: 124-126).

March 02, 2011

குர்ஆன் நேர்வழியை காண்பிக்கிறது என்ற அல்லாஹ்வின் உத்தரவாதம்!

நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (அல்குர்ஆன்:17:9)

March 01, 2011

உலக முடிவு நாள்வரை முரண்பாடுகள் ஏதுமற்ற இறுதி இறை வேதம்!

“அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (அல்குர்ஆன்: 4:84)