October 31, 2011

இறை வணக்கமான ஹஜ்ஜுக்காக தக்வாவை (பயபக்தியை) தயார் செய்தல்!

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும் எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும். எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 2:197)

October 30, 2011

ஹாஜி என்ற பெயருக்காக ஹஜ் செய்யாது, ஹஜ் என்ற வணக்கத்தை அல்லாஹ்வுக்காக முழுமை படுத்துதல்!

வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத் தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:11-14)

October 29, 2011

அல்லாஹ் சத்தியம் செய்யும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை நல்ல அமல்களைக் கொண்டு சிறப்பித்தல்!

விடியற் காலையின் மீது சத்தியமாக,

பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? (அல்குர்ஆன்: 89:1-5)

October 28, 2011

உலக மக்கள் யாவருக்கும் நேர்வழி காட்டும் இறை இல்லம்!

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 3:96-97)

October 27, 2011

சந்திரனின் கால அறிவிப்பு!

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்; "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர். எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 2:189)

October 26, 2011

தனது படைப்புகளிடம் எந்த தேவையுமற்ற புகழுக்குரிய அல்லாஹ்!

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள். ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன். புகழுக்குரியவன். (அல்குர்ஆன்: 35:15)

October 25, 2011

திட்டம் தீட்டி தீமை செய்பவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கின்றனர்!

எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்). தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன. ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான். அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும். (அல்குர்ஆன்: 35:10)

October 24, 2011

சிந்தனை செய்ய வேண்டிய இறை அத்தாட்சிகள்!

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது. (அல்குர்ஆன்: 35:9)

October 23, 2011

குர்ஆனாகிய இவ்வேதத்தை நிராகரித்தால்....?

எவர்கள் (சத்தியமாகிய இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு. (அல்குர்ஆன்: 35:7)

October 22, 2011

அனுபவித்துக் கொண்டிருக்கும் இறை அருட்கொடைகளை சிந்தித்து நேர்வழி பெறுதல்!

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள். வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்: 35:3)

October 21, 2011

அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் படைத்த புகழுக்குரியவன்!

அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும், பூமியையும் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 35:1)

October 20, 2011

அல்லாஹ்வின் தூதரின் சொல்லை கேலிக்குரியதாக கருதுபவர்கள் மிக வழிகேடர்களே!

"இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்" (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர். "நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்" (என்றும் அவர்கள் கூறுகின்றனர் (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்:25:41-42)

October 19, 2011

மனிதன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்கியவைகளே அவனுக்கு எதிராக திருப்பப்படும் ஒருநாள்!

அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான். (அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய். அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள். மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர். நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கி விட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள். மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச் செய்வோம்" (என்று இறைவன் கூறுவான்). (அல்குர்ஆன்: 25:17-18-19)

October 18, 2011

மனிதக் கரங்களால் படைக்கப்பட்ட பொய்த்தெய்வங்களால் முடியாத செயல்கள்!

(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள். (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள். மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 25:3)

October 17, 2011

உலகின் உண்மையான, அழகான ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவனே!

(அல்லாஹ்வாகிய அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை. அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான். (அல்குர்ஆன்: 25:2)

October 16, 2011

உலக சொத்துக்களின் உண்மையான சொந்தக்காரன் யார்?

இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் (அல்லாஹ்வாகிய) நாம் அனந்தரங் கொள்வோம். (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான். (அல்குர்ஆன்: 19:80)

October 15, 2011

வழிகேட்டில் இருப்பவனுக்கான அல்லாஹ்வின் கால அவகாசம்!

"யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான். (அவ்வாறு காணும்போது) எவருடைய வீடு கெட்டது எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 19:75)

October 14, 2011

அல்லாஹ்வை வணங்குவதில் ஏற்படும் கஷ்டங்களை சகித்து பொறுமையுடன் இருத்தல்!

"(அல்லாஹ்வாகிய அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?" (அல்குர்ஆன்: 19:65)

October 13, 2011

வீணான பேச்சோ, செயலோ இல்லாத அத்னு எனும் சுவனபதிகள்!

அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும். ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள். இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது. (அல்குர்ஆன்: 19:61-62)

October 12, 2011

பிரார்த்தனை என்பது அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே!

நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன். என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்" (என்று இப்றாஹீம் சொன்னார்). (அல்குர்ஆன்: 19:48)

October 11, 2011

இறைவன் அளித்துள்ள அறிவைக் கொண்டு சிந்தனை செய்து பார்த்தல்!

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து - பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். திராட்சைகளையும், புற்பூண்டுகளையும் - ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - அடர்ந்த தோட்டங்களையும், பழங்களையும், தீவனங்களையும்- (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, (அல்குர்ஆன்: 80:32)

October 10, 2011

நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதி!

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன்: 82:19)

October 09, 2011

இறைவனின் படைப்பில் அழகு மிளிரும் மனிதன், அவனுக்கே மாறு செய்தல் நலம் பயக்குமா?

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம-இறுதி) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். (அல்குர்ஆன்: 82:6-9)

October 08, 2011

அநியாயமான இச்செயலுக்காக படைத்தவனிடம் பயம் இல்லையா?

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளுக்காக, அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். (அல்குர்ஆன்: 83:6)

October 07, 2011

இறை கவனிப்பை அறியாது பாராமுகமாக இருந்தவனின் பயனற்ற இறுதிக் கூப்பாடு!

ஆனால், எவனுடைய பட்டோலை (தீர்ப்பு நாளில்) அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ - அவன் (தனக்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக - அவன் நரகத்தில் புகுவான். நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான். அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். (அல்குர்ஆன்: 84:10-15)

October 06, 2011

முடிவேயில்லாத நற்கூலியை பெற்றுத்தரும் நம்பிக்கையும், நன்னடத்தையும்!

எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு. (அல்குர்ஆன்: 84:25)

October 05, 2011

மனிதனுக்கு இவ்வுலக வாழ்வெனும் இந்நிலை மட்டும் தானா?

இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது (அல்லாஹ்வாகிய) நான் சத்தியம் செய்கின்றேன். மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள். (அல்குர்ஆன்: 84:16-19)

October 04, 2011

தனது கடமைகளை முழுமையாகச் செய்யும் வானமும், பூமியும்! மனிதன்?

வானம் பிளந்துவிடும் போது, தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது, இன்னும், பூமி விரிக்கப்பட்டு, அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது, தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன்: 84:1-6)

October 03, 2011

பெருமை பொருந்திய இறுதி இறை வேதம்!

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 85:21-)

October 02, 2011

உடலாலும், உள்ளத்தாலும் ஒரு முஸ்லிமை துன்புறுத்தாதிருத்தல்!

நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு. மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்குர்ஆன்: 85:10-11)

October 01, 2011

மனிதன் எச்சரிக்கைப் பெறுவதற்காகவே இறை அத்தாட்சிகள்!

(நம்முடைய அத்தாட்சிகளை எவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை (இதற்கு முன்) நாம் 'ஸமூது' கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர். (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை. (அல்குர்ஆன்: 17:59)